ஐபிஎல் தொடர் எப்போதும் இல்லாத வகையில் முழு தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. மொத்தம் துபாய், அபுதாபி,சார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே 60 போட்டிகளும் நடைபெறும். இந்நிலையில் மூன்று மைதானங்களில் வெவ்வேறு அளவினை கொண்டவை. குறிப்பாக அபுதாபி மைதானம் மற்ற இரண்டு மைதானங்களை விட அளவில் பெரியது. இந்த மைதானத்தில் நடக்கும் போட்டிகள் யாவும் குறைந்த ரன்கள் மட்டுமே எடுக்கப்படுகிறது.
சார்ஜா மைதனம் அளவில் மிகச் சிறியது இதன் காரணமாக அதிக ரன்கள் அடிக்கப்பட்டு வருகிறது. 3 மைதானத்திலும் பல கேட்ச் விடப்பட்டிருக்கிறது. பொதுவாக இந்த மைதானங்களில் பவர் பிளே ஓவர்களில் அடித்து துவம்சம் செய்யப்படும். இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் சில அதிகமான ரன்களை விட்டுக்கொடுப்பார்கள்.
அதனால் இந்த முறை 11 சதவீதம் மட்டுமே சுழற்பந்து பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு 24.3 சதவீதமும், 2018 ஆம் ஆண்டு 32.6 சதவீதமும் 2017ம் ஆண்டு 25.7 சதவீதமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படிப் பார்த்தால் இந்த வருடம் வேகப்பந்து வீச்சாளர்கள் பவர் பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.
இந்த 11 போட்டிகளில் முடிவடைவதற்குள் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு 10 போட்டிகளில் முடிவடைந்திருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் ஒரு முறை வெற்றி பெற்றிருந்தன. 2016 ஆம் ஆண்டு ஒவ்வொரு அணியும் ஒரு போட்டியில் வெற்றிபெற 12 போட்டிகளும், 2017 ஆம் ஆண்டு 13 போட்டிகளும், 2018 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் முடிவடைந்த பின்னர் தான் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
12 போட்டியில் முடிவடைந்துள்ள நிலையில் 11 முறை டாஸ் வென்ற அணி பந்து வீச மட்டுமே முடிவு செய்துள்ளது. இதிலும் இரண்டு முறை மட்டுமே பந்து வீசிய அணி வெற்றி பெற்றிருக்கிறது. டாஸ் வென்றாலும் தோல்விதான் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3 மைதானங்களிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்ததில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
சார்ஜா மைதானத்தில் சராசரியாக எட்டு பந்துக்கு ஒரு சிக்சரும், துபாய் மைதானத்தில் 20 பந்துக்கு ஒரு சிக்சரும், அபுதாபி மைதானத்தில் 23 பந்துக்கு ஒரு சிக்சருடன் அடிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் துபாய் மைதானத்தில் 67 கேட்ச் வாய்ப்புகளில் பத்துமுறை தவறவிடப்பட்டுள்ளது. அபுதாபியில் 37 ல் 3 தவறியுள்ளது. சார்ஜா மைதானத்தில் 18ல் இரண்டு தவறவிடப்பட்டுள்ளது.