ஐ.பி.எல் போட்டிகளின் நேரத்தில் ஏற்பட்ட மற்றம். இம்முறை மாலை 4 மணி, இரவு 8 மணிக்கு கிடையாதாம் – புதிய டைமிங் இதோ

ipl
- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக இங்கு நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் பல்வேறு முறை ஒத்தி வைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா போன்ற இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Ipl cup

இது குறித்த அட்டவணை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்வது குறித்து ஐபிஎல் குழு நேற்று ஆலோசனை நடந்தது நடத்தியது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படெல் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்ட சில தகவல்கள் இதோ :

- Advertisement -

ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒளிபரப்பு நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இறுதிப் போட்டியில் மட்டும் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டு நவம்பர் 10ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது. எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டி முதல் முறை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடரின் இடையில் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் என்ன ஆவது என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 24 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை ஒரு வீரர் கொரோனா பாதிப்பில் சிக்கினால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இம்முறை புதிதாக போட்டி நேரத்தில் இந்திய ரசிகர்களின் வசதிக்காக நேர மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 8 மணிக்கு துவங்கும் ஆட்டத்தை அரை மணி நேரத்திற்கு முன்பு முன்னதாகவே அதாவது ஏழரை மணிக்கு தொடங்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாலு மணிக்கு தொடங்கும் ஆட்டமும் அரைமணி நேரத்துக்கு முன்பாக ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

CskvsMi

மேலும் மொத்தம் பத்து நாட்கள் இரட்டை ஆட்டங்கள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதால் விரைவில் போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் அதுவும் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement