ஐக்கிய அரபு நாட்டில் ஐ.பி.எல் நடைபெறவுள்ள மைதாங்கள் உங்கள் பார்வைக்கு – வியக்கவைக்கும் தகவல் இதோ

Dubai
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. வேறு வழியின்றி கரோனா வைரஸ் காரணமாக தற்போது அங்கு நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ,மொத்தமுள்ள 60 போட்டிகளும் இங்குதான் நடைபெறும். இந்த நாட்டில் 5 மைதானங்கள் இருக்கிறது ஒவ்வொரு மைதானமும் வித்தியாசமாக இருக்கும். அப்படிப்பட்ட மைதானங்களை தற்போது பார்ப்போம்.

Ground

1. துபாய் கிரிக்கெட் மைதானம் :

- Advertisement -

இந்த மைதானம் 2009ம் ஆண்டு கட்டப்பட்டது. மொத்தம் 30 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில் பல டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று இருக்கிறது.

Ground

2. ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம் :

- Advertisement -

இந்த மைதானம் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மொத்தம் 20,000 பேர் அமர்ந்து பார்க்கலாம். இங்கு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2006 ஆம் ஆண்டு ஒரு நட்பு ரீதியான போட்டி நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து கவுண்டி அணியில் எங்கு அவ்வப்போது முதல்தர போட்டிகளில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் :

- Advertisement -

ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் இதுதான் அங்கு முதலில் கட்டப்பட்ட ஸ்டேடியம். 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. 17,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கலாம். முதன்முதலாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இங்கு 1984ம் ஆண்டு ஒருநாள் தொடர் நடைபெற்றது.

Ground

4. ஐ.சி.சி அகாடமி மைதானம் :

- Advertisement -

ஐசிசி அக்காடமி மைதானம் இந்த மைதானம் உள்ளூர் போட்டிகளை நடத்த பயன்படுத்தப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்றது. மேலும், கென்யா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையே 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரும் இங்கு நடத்தப்பட்டுள்ளது.

Ground

5.டாலரன்ஸ் ஓவல் :

இங்கே முதன்முதலாக 2018 மட்டும்தான் டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. அதன்பின்னர் நைஜீரியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதி இருக்கின்றன.

( குறிப்பு : ஐக்கிய அமீரக மைதானங்கள் அனைத்துமே ரசிகர்கள் கண்டுகளிக்க சிறியவை. ஏனெனில் அங்கு கிரிக்கெட் இன்னும் வளர்ச்சியடையவில்லை. வெளிநாட்டு அணிகள் மட்டுமே அங்கு போட்டிகளை நடத்துகின்றன.)

Advertisement