ஐபிஎல் டிக்கெட் விலை இவ்வளவா ! வாயை பிளக்கும் ரசிகர்கள்…பார்த்த அசந்துடுவீங்க – விவரம் உள்ளே

- Advertisement -

இரண்டாண்டு தடைக்கு பின் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஐந்த ஐபிஎல் சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளின் டிக்கெட் விலை இறுதிசெய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டன. கடந்தாண்டுகளை விட இந்தாண்டு டிக்கெட் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் டிக்கெட் விலை இவ்வளவா என்று வாயை பிளந்துள்ளனர்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 நகரங்களில் 51 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.சென்னை அணி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள உள்ளூர் லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை ஏப்ரல் 10ம் தேதி எதிர்கொள்கின்றது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு குறைந்தபட்ச டிக்கெட் விலையாக 1300ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக 6500ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

csk2

1300,1500,2500,4500,5000,6500 என மொத்தம் ஆறு கிளாஸ்களில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்நிலையில் இத்தனை வருடங்கள் இல்லாத அளவிற்கு இந்த முறை டிக்கெட் விலை அதிகரித்து இருப்பதாகவும், டிக்கெட் விலையை குறைத்து விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைத்துள்ளனர்.உள்ளூர் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்போது வெளியாகும் என்று இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement