IPL 2018: இதுவரை இல்லாத புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது !

dhoni
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

kohli

மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. 

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

- Advertisement -

dhoni

இந்த ஐபிஎல் சீசனில் முதன்முறையாக நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் புதிய விதிமுறை அமலுக்கு கொண்டுவரப்படுகின்றது.

எப்போதுமே இந்த விதிமுறையை எதிர்க்கும் பிசிசிஐ அதிசயமாக இம்முறை எதிர்க்காமல் இந்த முடிவை வரவேற்றுள்ளது.

- Advertisement -

dhoni

இதுவரையிலும் நடைபெற்ற போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாக இருந்துவந்தது. ஒரு நடுவருக்கு குழப்பமேற்பட்டால் சக நடுவருடன் கலந்தாலோசித்து இருவருமாக சிலநேரங்களில் முடிவை அறிவித்துவந்தனர் இதுவரையிலும். சில முக்கியமான போட்டிகளில் நடுவர்கள் அளிக்கும் தவறான ஒன்றிரண்டு முடிவுகளால் ஆட்டத்தின் போக்கே மாறி வெற்றியடைய வேண்டிய அணிகள் இறுதியில் தோல்வியடைந்த கதைகளும் உண்டு.

kohli

அவ்வாறான தவறான முடிவுகளால் அணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்கவே நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் புதிய முறை இந்த தடவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் பலரும் தற்போது இந்த முறையை வரவேற்று வருகின்றனர். என்ன ஒன்று இவ்வளவு நாள் நடுவர்களாக இருந்த சிலருக்கு தான் இந்த புதிய முடிவு சிறு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

எது எப்படியோ இனிமேல் இந்த புதிய விதிமுறையால் தவறான முடிவுகளால் விழும் விக்கெட்டுகளின் எண்ணிக்கை குறையும் என்பதில் சந்தேகமேயில்லை.

Advertisement