இரண்டாண்டு தடைக்கு பின்னர் களமிறங்கிய சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.சென்னை அணியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திடும் வகையில் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு அசத்தலான த்ரில் வெற்றிகளை பெற்றது.
தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி இந்த ஐபிஎல் சீசனில் இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் சென்னை அணி உள்ளது.இரண்டு போட்டிகளில் அதிரடி வெற்றிபெற்ற சென்னை அணி மூன்றாவது போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடாத அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்கெயிலை அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி களமிறக்கியது.ஐபிஎல் தொடருக்கு முன்னரே இந்த ஐபிஎல்-இல் பந்துவீச்சாளர்களை கதறவிட போவதாக கூறியிருந்த கெயில் சொன்னதை அப்படியே இந்த போட்டியில் செயலில் காட்டினார்.
சென்னை அணியினரின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கிய கெயில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.33 பந்துகளில் 7பவுண்டரிகள் மற்றும் 4சிக்ஸர்கள் உட்பட 63 ரன்களை விளாசி தள்ளினார்.மறுபக்கம் கே.எல்.ராகுல் 22பந்துகளில் 37 ரன்களை எடுக்க பின்னர் வந்த வீரர்களும் சீராக விளையாடிட பஞ்சாப் அணி 20ஓவர்களின் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது.அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த கிறிஸ்கெயில் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
What a knock from MS. Catching the highlights in peace after all the nerves. ???? pic.twitter.com/aQPAXtLsUH
— Prithi Ashwin (@prithinarayanan) April 15, 2018
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் சென்னை அணியின் கேப்டன் தோனி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்த சென்னை அணியை தனது அதிரடி ஆட்டத்தினால் இழுத்துப்பிடித்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.இறுதிவரை தோனி போராடிய போதும் சென்னை அணி வெற்றிபெறமுடியாமல் போனாலுமே கூட தோனி ஆடிய ஆட்டத்தை ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.
கடைசி பந்தில் தோனி சிக்ஸர் அடித்து அசத்தியபோதும் வெற்றிபெற மேலும் 4ரன்கள் தேவௌயென்பதால் சென்னை அணி தோல்வியை தழுவியது. பரபரப்பான இந்த போட்டியை ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அஸ்வினின் மனைவி ப்ரித்தி அஸ்வின் ஆகியோர் மைதானத்தில் கண்டுகளித்தனர்.போட்டிக்கு பின்னர் அஸ்வினின் மனைவி ப்ரித்தி அஸ்வின் டிவிட்டரில் “என்னவொரு அற்புதமான ஆட்டம் தோனியிடமிருந்து ! பரபரப்பான ஆட்டத்திற்கு பின்னர் தற்போது அமைதியாக மறுஒளிபரப்பில் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருக்கின்றேன்” என்று எழுதியுள்ளார்.