நடக்கும் ஐபிஎல் சீசன்-இல் 5 சிறந்த ஆல் ரவுண்டர்ஸ்..! – இதில் சென்னை வீரர் யார் தெரியுமா..?

pandiya
- Advertisement -

11 ஐ.பி.எல் போட்டி வரும் ஞாயற்றுக்கிழமையுடம் முடிவடையுள்ளது. இந்த இறுதி போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணி மோதவுள்ளது. இதுவரை 59 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடிய டாப் 5 ஆல்ரவுண்டர் பட்டியலை தற்போது காணலாம்.
Bravo

டுவைன் பிராவோ:-
சில ஆண்டுகளாக சென்னை அணியில் விளையாடி வரும் இவர், இந்த தொடரில் தான் ஆடிய முதல் போட்டியிலேயே தனது அதிரடியை காட்டி 30 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். இந்த தொடரில் 141 ரன்களை குவித்துள்ள பிராவோ 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

ஆண்ட்ரே ரசல்:-
கரேபியன் ஆல்ரவுண்டரான இவர் கொல்கத்தா அணி சென்னையுடன் விளையாடிய 2 வது போட்டியில் 36 பந்துகளில் 88 ரன்களை குவித்தார். கொல்கத்தா அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 316 ரன்களை குவித்து 13 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
russel

ஹர்திக் பாண்டியா:-
மும்பை அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் கைகொடுக்காத போதிலும், இந்த அணியில் விளையாடிய பாண்டியா 14 போட்டிகளில் விளையாடி 228 ரன்களை குவித்தார். பந்துவீச்சில் 12 விக்கெட்டுகக்ளை வீழ்த்திய இவர் ஓவருக்கு 7.12 ரன்களை மட்டுமே அளித்துள்ளார்.

சகீப் அல் அசன்:-
ஹைதராபாத் அணியில் விளையாடிவரும் வங்கதேச வீரர், 16 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 216 ரன்களையும் தனது பேட்டிங்கில் குவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 35 ரன்களை பெற்றுள்ளார்.
narine

சுனில் நரைன்:-
கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான இந்த ஆள் ரவுண்டு வீரர். இந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்தார். 16 போட்டிகளில் 357 ரன்களை குவித்த இவர் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் பந்து வீச்சில் ரன் தருவதில் கவனமாக இருந்த இவர் ஓவருக்கு 7.65 என்ற ரன்களை மட்டுமே அளித்துள்ளார்.

Advertisement