சச்சினால் நான் ஏகப்பட்ட கஷ்டங்களை அடைந்திருக்கிறேன். அவர் ரொம்ப கில்லாடி – புலம்பிய பாக் வீரர்

Sachin-1
- Advertisement -

பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சாமாம் உல் ஹக் பல வருடங்களுக்குப் பின்னர் சச்சின் தன்னை எவ்வாறெல்லாம் டார்ச்சர் செய்தார் என்று பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :கிரிக்கெட்டிற்கு எனவே பிறந்தவர் சச்சின். வெறும் 16 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமான போது வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், க்ளேன் மெக்ராத் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்த்து அவர் எப்படி ஆடினார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

sachin ganguly 2

- Advertisement -

அவரால் மட்டுமே இது சாத்தியம். தற்போதைய சூழலில் சச்சின் போன்று விளையாட யாருமே இல்லை. அந்த காலத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்ட எல்லோரும் 8 ஆயிரம் ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதுவும் ஒரே ஒரு பார்மட்டில் மட்டும்தான். சுனில் கவாஸ்கர் எப்படியோ 10,000 ரன்கள் விளாசினார். அதனை யாராலும் அடிக்க முடியாது என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் அதனையும் தாண்டி பல சாதனைகளை படைத்தார். தற்போது யார் அதனை முறியடிப்பார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். சச்சின் பேட்டிங் பேட்டிங்கில் மட்டும் வித்தகர் இல்லை. பந்துவீச்சிலும் அவர் மிகப்பெரிய திறமையை கொண்டிருந்தார் . அவரால் லெக் ஸ்பின் மற்றும் ஆப் ஸ்பின் வீச முடியும்.

inzamam

மிதமான வேகத்தில் வீசுவார் பவுலிங்கில் அவர் ஒரு ஜீனியஸ். அவருடைய பந்துவீச்சை எதிர் கொள்வதில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவர் பந்து வீச்சில் பலமுறை நான் ஆட்டம் இலந்திருக்கிறேன் இவ்வாறு கூறினார் இன்சமாம் உல் ஹக்.

Advertisement