கனேரியா சொல்வது உண்மை இல்லை. என் தலைமையில் பாகிஸ்தான் அணி இப்படித்தான் இருந்தது – விவரம் இதோ

Inzamam
- Advertisement -

ஸ்பாட் ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான கனேரிய. இவர் இந்து என்பதால் தனக்கு அணியில் பாகுபாடு ஏற்பட்டதாகவும், சக வீரர்களை தன்னிடம் பழகுவதற்கு யோசிப்பார்கள் என்றும் ஒரு கருத்து வெளியிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

Kaneria 1

- Advertisement -

அதில் தடைக்குப் பின் பாகிஸ்தான் அரசோ அல்லது கிரிக்கெட் வாரியமும் எனக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்றும் என்னுடன் விளையாடிய வீரர்களை அவர்கள் கவுரவித்த போதும் என்னை அவர்கள் தவிர்த்தது உண்மைதான் என்றும் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்ஜமாம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : என் தலைமையிலான அணியில் தான் கனேரியா இடம் பிடித்து விளையாடி வந்தார். ஒரு போதும் என் அணியில் அவர் கூறியவாறு நடைபெற்றது இல்லை மேலும் அணியில் அதுபோன்றே பாகுபாட்டை நான் பார்த்ததும் கிடையாது. எனது அணியில் என்றும் அது போல ஒரு சம்பவத்தை நான் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

inzamam

மேலும் பாகிஸ்தானியர்களுக்கு சிறு இதயம் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் பாகிஸ்தானியர்கள் இதயம் மிகப்பெரியது. இந்தியா பாகிஸ்தான் என இரு அணி வீரர்களும் வெளிநாட்டு தொடர்களில் ஒரே ஹோட்டலில் தங்கி ஒன்றாகவே உணவு அருந்தும் பழக்கத்தை வைத்திருந்தனர் என்றும் இன்ஜமாம் கூறினார்.

Advertisement