இந்திய அணி செய்த காரியத்தை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு – இன்ஜமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ஆனது அடுத்த டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் இழந்தது. இந்த டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது.

Dhawan

- Advertisement -

முதல் டி20 போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னணி வீரரான க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக அவரோடு சேர்ந்து 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இந்திய அணி கடைசி 2 போட்டிகளிலும் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்களுடன் களம் இறங்கி அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

என்ன தான் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் இந்திய வீரர்களின் போராட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் இந்திய அணி எதிர்கொண்ட இந்த இலங்கைத் தொடரின் சவால் குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Varun

இந்திய அணி இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக 9 வீரர்கள் அணியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் பாதியிலேயே இந்த தொடரை முடித்துக் கொள்ளாமல் முழுத் தொடரையும் இந்திய அணி சந்தித்து விளையாடியிருக்கிறது. இந்திய அணியின் இந்த போராட்ட குணம் பாராட்டக்கூடிய ஒன்று.

IND

இந்திய அணி நினைத்திருந்தால் இந்த தொடரே வேண்டாமென்று விலகி இருக்கலாம் ஆனால் இருக்கும் வீரர்களை வைத்து கடுமையாக போராடி தோல்வி அடைந்தது. தோல்வியைக் கண்டு பயப்படாத அணியாக தற்போதுள்ள இந்திய அணி உள்ளது பாராட்டுக்குரியது. தோல்வியை கண்டு பயம் இல்லாமல் விளையாடினாலே வெற்றி நமக்கு வந்து சேரும் என இன்சமாம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement