எனக்கு ஒன்னும் ஆகல. எதுவுமே உண்மை கெடையாது – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இன்சமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட்டர் இன்சமாம் உல் ஹக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் என்ற செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து உலக அளவில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் அவர் உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது பிராத்தனைகளை பகிர்ந்து வந்தனர்.

inzamam

- Advertisement -

இந்நிலையில் தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் தனது உடல்நிலை குறித்து வந்த தகவல் அனைத்தும் வதந்தி என்றும் வெளிப்படையாக தனது யூடியூப் சேனலின் மூலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த சில நாட்களாகவே நான் மாரடைப்பு காரணமாக அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனையில் இருந்ததாகவும் வெளியான செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தி தான்.

இருப்பினும் எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள ரசிகர்கள் மற்றும் பல வீரர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் ஆகவில்லை மாரடைப்பு ஏற்பட்டது என்பது முற்றிலும் பொய்யான செய்தி. எனது வயிற்றுப் பகுதியில் சற்று அசௌகரியமாக உணர்ந்ததால் நான் வழக்கமாக செல்லும் பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்று இருந்தேன்.

inzamam

அப்போது எனக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டபோது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக எனக்கு ஸ்டென்ட் மட்டும்தான் பொருத்தப்பட்டது. அந்த சிகிச்சையும் எளிதாக விரைவில் முடிவடைந்தது. இதன் காரணமாக நான் 12 மணி நேரத்திலேயே வீடு திரும்பிவிட்டேன்.

- Advertisement -

Inzamam

தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். என்னுடைய உடல்நிலை குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். நான் தற்போது முழுநலத்துடன் இருக்கிறேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இவங்க 2 பேரோட மோசமான ஆட்டம் இந்திய அணிக்கு தான் கஷ்டமா இருக்கப்போகுது – அஜித் அகார்க்கர் பேட்டி

இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று செய்திகள் பரவியதும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே போன்றவர்கள் கூட தங்களது ட்விட்டர் பக்கத்தில் மூலம் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement