இவர்கள் 3 பேரும் தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் – இன்ஜமாம் உல் ஹக் பேட்டி

Inzamam
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். கிரிக்கெட்டுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்த மூன்று வீரர்களைப் பற்றி பேசியுள்ளார். பல்வேறு காலகட்டங்களில் இந்த மூன்று வீரர்களும் கிரிக்கெட்டில் முறையான தொழில் நேர்த்தியான ஆட்டத்தை புகுத்தியுள்ளனர் என்று பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய முதல் வீரர் என்ற வெஸ்ட் இண்டீசை சேர்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ் ஆவார்.

inzamam

- Advertisement -

1970களில் அதிரடி பேட்ஸ்மேன் ஆக வலம் வந்தவர். அந்த காலகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் பின்னால் நகர்ந்து தான் ஆடுவார்கள். ஆனால் முன்னாள் வந்து வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து ஆட முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் அவர். அவருக்குப் பின் வந்த பேட்ஸ்மேன்கள் இவரது முறையைப் பின்பற்றி முன்னால் வந்து அதிரடியாக ஆட தொடங்கினார்.

இரண்டாவதாக மாற்றத்தை கொண்டு வந்தவர் இலங்கையைச் சேர்ந்த இடதுகை அதிரடி பேட்ஸ்மேன் ஜெயசூரிய ஆவார் . இவர் ஆடிய காலகட்டத்தில் பந்தை தூக்கி அடித்தால் அவர் முறையான பேட்ஸ்மேன் இல்லை என்று கிண்டல் அடிப்பார்கள்.

jayasuriya

ஆனால் முதல் 15 ஓவர்களில் எவ்வளவு அதிரடியாக ஆட முடியுமோ, எவ்வளவு தூக்கி அடிக்க முடியுமோ, அப்படி ஆடி மாற்றத்தை கொண்டு வந்தவர். இவர் மூலம்தான் முதல் 15 ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் உலகத்திற்கு தெரிந்தது.

ABD-1

மூன்றாவது மாற்றத்தை ஏற்படுத்தியவர் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ் ஆவார் . இன்றைய காலகட்டத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்கள் அதிரடியாக ஆடுவதற்கு இவரே காரணம் பொதுவாக பேட்ஸ்மேன்கள் சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டுமானால் மேலே தூக்கி அடிப்பார்கள். ஆனால் ஸ்லீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பந்தை நாலாபுறமும் அடித்து வீரர்களுக்கு காட்டினார் இவர். இதன் மூலம் கிரிக்கெட் உச்சக்கட்டத்தை அடைந்தது என்று கூறினார் இன்சமாம் உல் ஹக்.

Advertisement