என்ன இருந்தாலும் தோனி இப்படி செய்திருக்க கூடாது. அவரது ரசிகர்கள் பாவம் – உருக்கமாக பேசிய இன்சமாம் உல் ஹக்

Inzamam

எப்போதும் போல் எளிமையாக இருக்கும் தோனி தனது ஓய்விலும் மிகப்பெரிய எளிமையே கடை பிடித்துள்ளார். இந்த எளிமைக்காகவே தற்போது வரை பேசப்பட்டு வருகிறார். 16 வருடங்கள் இந்திய அணிக்காக ஆடி பல சாதனைகள் படைத்த தோனி எளிமையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வை அறிவித்தார்.

Dhoni

ஆனால் பல முன்னாள் வீரர்களுக்கு இது சரிப்பட்டு வரவில்லை. ஏனெனில் இத்தனை சாதனைகள் படைத்து விட்டு இவ்வளவு எளிமையாக ஒரு வீரரை அனுப்பக் கூடாது என்று அவர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இந்திய வீரர்களை தாண்டி பாகிஸ்தான் வீரர்களும் இவ்வாறு கூறி உள்ளார்கள். அதன்படி பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல்-அக் இது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

தோனி பல சாதனைகள் படைத்து விட்டார். அவருக்கு ஒரு போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரியும். ஒற்றை ஆளாக காலத்தில் நின்று போட்டியை வெல்ல வைப்பவர். அனைத்து போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஆனால் தேவைப்படும்போது தனது பேட்டியை வெளிப்படுத்தி சதம் அடிப்பார் தோனிக்கு எவ்வாறு வீரர்களை மேம்படுத்தி அழைத்துச் செல்வது என்று நன்றாக தெரியும்.

Dhoni

ஆட்டத்தின் சூழலை சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்வார். அந்த வீரர்கள் தான் தற்போது மிகச் சிறந்த வீரர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் உருவான வீரர்கள்தான் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் . அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

- Advertisement -

Ms Dhoni Bhuvneshwar-Kumar

தோனி தனது ஓய்வினை அவர் வீட்டிலிருந்து அறிவித்து இருக்கக்கூடாது. மைதானத்தில் ரசிகர்கள் முன்பு அறிவிக்க வேண்டும் இது போன்று இன்னும் ஒரு சில போட்டிகள் நடத்தி தோனிக்கு மிகப்பெரிய பிரியா விடை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இன்சமாம் உல்-அக்.