இவரைப்போன்ற ஒருவீரர் இந்திய அணிக்கு கிடைப்பது அரிது – இளம்வீரரை புகழ்ந்த இன்சமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இடம்பெற்ற சுப்மன் கில் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

indvseng

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தொடக்க வீரரான கே.எல் ராகுலுக்கு முதல் போட்டியின்போது வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கேஎல் ராகுல் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 84 ரன்களை குவித்தார்.

அதன் பின்னர் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் முதல் இன்னிங்சில் 129 ரன்கள் குவித்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்திருந்தார். இந்நிலையில் இவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பலரும் வெகுவாகப் பாராட்டிப் பேசி வருகின்றனர்.

Rahul-1

அந்த வகையில் தற்போது இவரின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உள்ள கூறுகையில் : கேஎல் ராகுல் போன்ற வீரர் கிடைப்பது அரிது. அவர் இதுவரை அடித்துள்ள ஆறு சதங்களில் 5 சதங்கள் வெளிநாட்டு மண்ணில் வந்துள்ளன. ஆஸ்திரேலிய மைதானத்தில் சதம் அடித்தது மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

Rahul

இதுபோன்று அயல்நாடுகளில் சதம் விளாசுவது சாதாரண விடயம் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க காலங்களில் இதுபோன்ற ஆட்டம் வெகு சிலராலேயே சாத்தியமாகும். அந்த வகையில் ராகுலின் ஆட்டம் சிறப்பான ஒன்று அவருக்கு எனது வாழ்த்துக்கள் என இன்சமாம் உல் ஹக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement