இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவரை சேர்க்காதது மிகப்பெரிய தவறு – இன்ஜமாம் ஓபன்டாக்

Inzamam
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய 15-வது ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் ஏற்கனவே “சூப்பர் 4” சுற்றுக்கு தகுதியான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான “சூப்பர் 4” சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்திய அணி லீக் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி “சூப்பர் 4” சுற்றுக்குள் நுழைந்தது.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

இந்நிலையில் “சூப்பர் 4” சுற்றிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிச்சயம் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் “சூப்பர் 4” சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடனும், இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணியுடனும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக தற்போது இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் இந்திய அணியின் வாய்ப்பு பறிபோகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த “சூப்பர் 4” சுற்றில் இந்திய அணி அடைந்த அடுத்தடுத்த தோல்விகளால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் அதிக மாற்றங்களை செய்ததும், தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கொடுக்காததும் பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய தினேஷ் கார்த்திக் அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாட வைக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வருகிறார்.

Dinesh Karthik 1

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துவரும் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறாதது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், இந்திய அணி தேர்வு குறித்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது வீரர்களை தேர்வு செய்யும் முறையை கண்டு நான் பீதி அடைந்து வருகிறேன்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களை பார்க்கும் பொழுது அவர்கள் அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னை பொறுத்தவரை ஆசியக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருக்க வேண்டும். ஒரு பந்து கூட எதிர் கொள்ளாமல் அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்குவது தவறான ஒன்று. தினேஷ் கார்த்திக் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டிய ஒரு வீர என இன்சமாம் தனது ஆதரவனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : எந்த திட்டமும் இல்லை, ஒரே வீடியோவை வைத்து ரோஹித் – டிராவிட்டை விளாசும் ரசிகர்கள், நடந்தது இதோ

அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிரன் மோரே மற்றும் சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரரான ராபின் உத்தப்பாவும் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement