எந்த திட்டமும் இல்லை, ஒரே வீடியோவை வைத்து ரோஹித் – டிராவிட்டை விளாசும் ரசிகர்கள், நடந்தது இதோ

dravid
- Advertisement -

அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றில் வழக்கம் போல முக்கிய நேரங்களில் சொதப்பி பரம எதிரி பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் எளிதாக 8வது ஆசிய கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா தற்போது பைனலுக்கு கூட செல்லாமல் வீட்டுக்கு கிளம்புவது 99% உறுதியாகியுள்ளது.

இத்தனைக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளை விட அனுபவத்திலும் தரத்திலும் திறமையிலும் பஞ்சமில்லாத வீரர்கள் நிறைந்திருந்த போதிலும் இப்படி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மேற்குறிப்பிட்டது போல் தரமான வீரர்கள் இருந்த போதிலும் அவர்களை கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் சரியாக பயன்படுத்தாததே இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சுமாரான ரோஹித் – ட்ராவிட்:
முதலில் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய துபாயில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில் வெறும் 3 முழு நேர வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்தியா ஆவேஷ் கானை நீக்கிய போது அவருக்கு பதிலாக தீபக் சஹர் போன்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தும் அளவுக்கு தேர்வுக்குழு தவறு செய்தது. சரி அதுதான் கைமீறிப் போய்விட்டது அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களையாவது சரியாக பயன்படுத்தினார்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.

ஆம் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தோல்வியடைவதற்கு 10 – 15 ரன்கள் குறைவாக எடுத்ததே காரணமென்று அனைவருக்கும் தெரிந்த கதையாகிவிட்டது. ஆனால் அந்த ரன்களை அதிரடியாக எடுக்கக் கூடிய தினேஷ் கார்த்திக்கை சம்மந்தமின்றி நீக்கிவிட்டு வாய்ப்பளித்த ரிஷப் பண்ட் வழக்கம் போல சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதேபோல் ஜடேஜாவுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட தீபக் ஹூடாவுக்கு ஒரு ஓவர் கூட பந்து வீசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் டாப் ஆர்டரில் விளையாடிய அவர் இதற்கு முன் பினிஷிங் செய்த அனுபவமில்லை என்று தெரிந்தும் 6, 7 ஆகிய இடங்களில் களமிறக்கப்பட்டார்.

- Advertisement -

அப்படி பந்துவீசாமல் தீபக் ஹூடா லோயர் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு தினேஷ் கார்த்திக்கே விளையாடியிருக்கலாமே என்பதே ரசிகர்களின் நியாயமான கேள்வியாக இருக்கிறது. இவை அனைத்தையும் ஏன் என்று கேள்வி கேட்டால் உலகக்கோப்பைக்கு முன்பாக சோதனை முயற்சி என்று போட்டியின் முடிவில் கேப்டன் ரோகித் சர்மா கூலாக பதிலளிக்கிறார். ஆனால் இது போன்ற சோதனைகளை சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அல்லது அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் செய்து பார்க்கலாமே மாறாக ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தான் செய்து பார்க்க வேண்டுமா என்று ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

மொத்தமும் சொதப்பல்:
இப்படி இந்த ஆசிய கோப்பையில் எவ்வித திட்டமில்லாமல் கேப்டன் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் மெத்தனமாக செயல்பட்டதை சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரே ஒரு வீடியோ மொத்தமாக விளக்குகிறது. அதாவது இலங்கைக்கு எதிரான போட்டியில் 13/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்றாலும் அதிரடியாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 72 (41) ரன்கள் குவித்து சரிவை சரிசெய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அப்போது ஏற்கனவே களத்தில் சூரியகுமார் இருந்ததால் இடதுகை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் களமிறங்க தயாரானார். அது கிட்டத்தட்ட சரியான முடிவு என்ற நிலைமையில் கடைசி நேரத்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அடங்கிய அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை பேட்டிங் செய்ய செல்லுமாறு முடிவை மாற்றி கட்டளையிட்டது. அதற்கு தயார் என்ற வகையில் சைகை செய்த பாண்டியா அவசர அவசரமாக கையுறைகள் மற்றும் ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு சென்றார்.

மறுபுறம் “அப்பாடா தப்பித்தோம், நீங்கள் போய் அவுட்டாகி வாங்க, அடுத்ததாக நான் போய் அடித்து பெரிய ரன்களை எடுப்பேன்” என்ற வகையில் சுயிங்கம்மை வாயில் போட்டு ரிஷப் பண்ட் கொடுக்கும் ரியாக்ஷன் அணிக்குள் ஒற்றுமை இல்லாததை தெளிவாக காட்டுகிறது.

இதையும் படிங்க : இப்போவும் சொல்றேன் உலகக்கோப்பையில் நிச்சயம் அது நடக்கும் – ரோஹித் சர்மா நம்பிக்கை

ஆனால் இறுதியில் இருவருமே சொல்லி வைத்தார் போல் 13 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களில் அவுட்டானது வேறு கதை. ஆனால் ரோகித் சர்மா அவுட்டான போது 110/3 என்ற நல்ல நிலைமையில் இருந்த ஸ்கோரை அப்படியே கொண்டு செல்லும் அளவுக்கு பேட்டிங் ஆர்டரை ராகுல் டிராவிட் சரியாக முடிவெடுக்கவில்லை என்று ரசிகர்கள் வெளுத்து வாங்குகிறார்கள்.

Advertisement