விராட் கோலியை விட இவர் சிறந்த பேட்ஸ்மேன். பாக் அணியின் இளம் வீரரை புகழ்ந்த – இன்சமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

இந்த காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று பார்க்கப்பட்டால் அது விராட் கோலி தான். கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவரும் அவருடன் ஒப்பிடபட்டாலும் விராட் கோலியின் அளவிற்கு அவர்களால் வந்துவிட முடியாது. அந்த அளவிற்கு மூன்று விதமான போட்டிகளிலும் மிகச்சிறப்பாக ஆடுவதில் விராட் கோலி வல்லவர்.

kohli 2

- Advertisement -

ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளிலும், கேன் வில்லியம்சன் ஒருநாள் போட்டிகளிலும், ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் விராட் கோலி அப்படி அல்ல. இந்நிலையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் தற்போது அனைத்து விதமான போட்டிகளிலும் பெயர் சொல்லும் அளவிற்கு ஆடிவருகிறார்.

இதன் காரணமாக அவர் அவ்வப்போது விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசப்படுகிறார். இந்நிலையில் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாபர் அசாம் குறைந்த கால கட்டத்திலேயே ஏராளமான சாதனைகளை படைத்து விட்டார்.

Azam

ஆனால் தற்போது வரை அவர் படைத்துள்ள சாதனைகளை விட இன்னும் அவரால் பல சாதனைகளை படைக்க முடியும் விராட் கோலி பத்து வருடத்திற்கு முன்னர் விளையாடி நிலையில் தற்போது பாபர் அசாம் மூன்று, நான்கு வருடங்களிலேயே ஆடிவிட்டார். ஆரம்ப காலகட்டத்தில் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு இந்திய வீரர்களை எப்படியாவது மட்டம் தட்டிப் பேச வேண்டும் இதன் காரணமாகத்தான் அவர் தன் நாட்டு வீரர்களை வைத்து இப்படி பேசிக் கொண்டிருக்கிறார் இன்சமாம் உல் ஹக் என்று தெரிகிறது.

Advertisement