2002 ல பாகிஸ்தான் வந்த அவங்க பயத்துல கண்ணீர் விட்டு அழுததை நான் என் கண்ணால பாத்தேன் – இஞ்சமாம் உல் ஹக் பகிர்வு

Inzamam
- Advertisement -

நியூசிலாந்து அணி 2002 ஆம் ஆண்டு ஸ்டீபன் பிளமிங் தலைமையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி கொண்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற இருந்தது . இந்த போட்டியில் விளையாடுவதற்காக இரண்டு அணி வீரர்களும் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தனர்.

Inzamam 1

- Advertisement -

அப்போது திடீரென அந்த ஹோட்டல் அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது . இந்த குண்டு வெடிப்பு காரணமாக நியூசிலாந்து வீரர்கள் தங்கியிருந்த அறைகளின் கண்ணாடிகள் சிதறி வெடித்தது. இது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரும் துயர நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் கராச்சி சென்று இரண்டாவது டெஸ்ட் ஆடுவதற்கு முன்னதாக அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு வீரருக்கும் காயம் ஏற்படவில்லை. இது மிகவும் மோசமான நாளாக இருந்தது. குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் தான் என்னுடைய அறை இருந்தது.

என்னுடைய அறையின் கண்ணாடி உடைந்து அறையின் மறுபுறம் இருந்த சுவற்றில் மோதியது. இதனால் வேகமாக படிக்கட்டு வழியாக இறங்கிச் சென்றேன். அங்கு நீச்சல் குளத்தின் அருகே நியூசிலாந்து வீரர்கள் அழுது கொண்டிருந்தனர். எனது மனது உடைந்துவிட்டது. இதனால் நியுஸிலாந்து வீரர்கள் உடனடியாக தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பினார்கள் என்று கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.

- Advertisement -

ஏற்கனவே பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகளும் பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பயந்து வருகின்றன. அந்நாட்டின் தீவிரவாத சூழல் காரணமாக பலநாட்டு அணிகளும் பாகிஸ்தானில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போதுதான் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடின.

Pak-1

இந்நிலையில் மீண்டும் இன்சமாம் இந்த தாக்குதல் விவகாரம் குறித்து நினைவு கூர்ந்துள்ளதால் அந்நாட்டிற்கு செல்ல எந்த அணிநிர்வாகமும் பயப்படவே செய்யும். மேலும் இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெற்று பலவருடங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement