அவர் அடித்த சிக்ஸரை பார்த்து மிரண்டுபோனேன். அவருக்கு எப்பவும் வயசே ஆகாது – புகழ்ந்து தள்ளிய இன்ஜமாம்

Inzamam
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் இந்த வேலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது மட்டுமின்றி தங்களது கிரிக்கெட் அனுபவங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்ஜமாம் உல் ஹக் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

inzamam

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டதாவது : அப்போதைய கிரிக்கெட்டுக்கும் இப்போதிருக்கும் உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துகொண்டார். நான் ஒருமுறை விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் இணைந்து பேட்டிங் செய்யும் ஒரு வாய்ப்பினைப் பெற்றேன். அப்போது அவர் என்னிடம் வந்து நம் இருவரில் யார் அதிக தூரம் சிக்ஸர் அடிக்கிறார்கள் என பந்தயம் வைத்துக் கொள்ளலாமா எனக் கேட்டார்.

நானும் அதற்கு சிரித்துக்கொண்டே நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டேன். ஏனெனில் அவர் அப்போது ஓய்வு பெற்ற வீரர் என்பதால் அவர் சாதாரணமாகவே விளையாடுவார் என்று நினைத்து அந்த சவாலை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்தப் போட்டியில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தின் வெளியே உள்ள பார்க்கிங்கில் சென்று விழுந்தது.

viv richards

அடுத்து நான் அதையும் தாண்டி அடிக்கவேண்டும் என்று நினைத்து அடித்தபோது பந்து அதைவிட தூரமாகப் போய் விழுந்தது. அதன் பிறகு நான் ரிச்சர்ட்சனிடம் சென்று உங்களைவிட தூரமாக அடித்துவிட்டேன் என்றேன். அதற்கு அவர் இன்னும் போட்டி முடியவில்லை நாம் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்து சிக்சர்களை அதையும் தாண்டி மைதானத்தின் வெளியே இருக்கும் வீடுகளுக்கு அடித்தார்.

அப்பொழுதுதான் நான் மிரண்டு போனேன். சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் அவரது ஆக்ரோஷம் என்னை பிரமிக்க வைத்தது. இளம் வீரர்கள் அவரிடம் கற்க வேண்டிய விஷயம் இவைகள்தான். டி20 போட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆக்ரோஷம் குறைவாகத்தான் இருக்கிறது. போட்டிகளில் ஆக்ரோஷம் இருந்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்றும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement