விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் இன்ஸ்டராகிமில் ஒரு போஸ்ட் போட – வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Dhoni-Kohli-Rohit
- Advertisement -

உலக அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய பாலோவர்களை கொண்ட விளையாட்டு நட்சத்திரங்கள் அதில் போடும் பதிவிற்காகவே பல கோடிகளை சம்பளமாக பெறுகின்றனர். அந்த வகையில் உலகளவில் அதிக சம்பளத்தை ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கு பெறும் முதல் 100 வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் உலகிலேயே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கு அதிக சம்பளம் வாங்கும் வீரராக கால்பந்து வீரர் ரொனால்டோ திகழ்கிறார்.

அவர் இன்ஸ்டாகிராமில் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் இந்திய மதிப்பில் சுமார் 26 கோடியே 76 லட்ச ரூபாய் பெறுகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று இரண்டாவது இடத்தில் லியோனல் மெஸ்ஸி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு 22 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த 100 பேர் கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியைச் சேர்ந்த விராத் கோலி திகழ்கிறார். இந்த பட்டியலில் 14-வது இடத்தில் இருக்கும் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் 11 கோடியே 45 லட்சம் வரை பெறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று இவருக்கு அடுத்து இந்திய அணியின் வீரர்களாக யார்? யார்? அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்ற கணக்கினை எடுத்துப் பார்க்கையில் அதில் விராட் கோலிக்கு அடுத்து 11 மடங்கு குறைவாக அதாவது ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறும் வீரராக தோனி இருக்கிறார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் போடும் ஒரு பதிவிற்கு 75 லட்ச ரூபாய் வரை பெறுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னதான் ரோஹித் மற்றும் தோனி ஆகியோருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் இருந்தாலும் அவர்களை காட்டிலும் பத்து மடங்கு விராட் கோலிக்கு பாலோவர்ஸ் அதிகம்.

இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங்கே என்கிட்ட அந்த 21 வயது இந்திய வீரரை பற்றி பாராட்டினாரு – நாசர் ஹுசேன் பகிர்ந்த தகவல்

அதன்காரணமாகவே தோனி மற்றும் ரோஹித் சர்மாவை விட விராட் கோலி 10 மடங்கு அதிகளவில் பணத்தை இன்ஸ்டாகிராம் மூலம் பெறுகிறார் என்பது இந்த பட்டியலின் மூலம் தெளிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement