INDvsRSA : இன்றைய 3 ஆவது போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் இந்த ஒரு மாற்றம் இருக்கும் – வெளியான தகவல்

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இவ்விரு அணிகளும் மோதிக் கொண்ட முதல் இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது. அதன் காரணமாக தற்போது தென் ஆப்பிரிக்க அணி இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Klassen 1

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று இரவு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதே போன்று இந்த தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை வெல்ல முடியும் என்பதினால் இந்திய அணியும் இந்த போட்டியில் தங்களது தீவிர செயல்பாட்டை வெளிக்காட்டும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த மூன்றாவது டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhuvaneswara Kumar

அணியில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் நிச்சயம் இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பேட்டிங் ஆர்டரில் இந்த போட்டியில் தீபக் ஹூடா இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதனை தவிர்த்து பந்துவீச்சாளர்களில் நிச்சயம் இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஆவேஷ் கான் ஆகிய இருவரில் ஒருவர் கழட்டி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப் சிங் அதிக இருவரில் ஒருவருக்கு கட்டாயம் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs RSA : வாழ்வா – சாவா போட்டியில் வெல்லுமா இந்தியா, விசாகபட்டின மைதான பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

ஏற்கனவே முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இன்றைய போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் இத்தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ளது. மேலும் சீனியர் வீரர்கள் இல்லாத இளம் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement