- Advertisement -

மூன்றாம் நாள் ஆட்டமாவது நடைபெறுமா? வானிலை அறிக்கை சொல்வது என்ன? – வெளியான வெதர் ரிப்போர்ட்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே போட்டியாக துவங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்து பலமான நிலையில் உள்ளது.

இந்திய அணியின் சார்பாக துவக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் 108 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முழுவதுமாக மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

இதன் காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது நாள் ஆட்டங்களில் கூடுதலாக 8 ஓவர்கள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுமா? இன்றும் அல்லது மழை பெய்ய வாய்ப்பு ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்த வானிலைஅறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி வெளியான தகவலில் போட்டியின் மூன்றாம் நாளான இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் இன்றும் நாளையும் போட்டி முழுவதுமாக இந்த ஒரு சிக்கலும் இன்றி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது சற்றே நமக்கு ஆறுதல் தரும் விடயமாக இருக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா நாட்டில் இந்திய அணியின் லன்ச் என்ன? வீரர்கள் சாப்பிடும் உணவுகள் என்ன? – வைரலாகும் புகைப்படம்

ஆனால் போட்டியின் கடைசி ஐந்தாவது நாளில் நிச்சயம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -
Published by