INDvsRSA : ரத்தாக போகிறதா டி20 போட்டி. அவசரமாக மீட்டிங்கை போட்ட பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

INDvsRSA
- Advertisement -

இந்தியாவில் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்த வேளையில் இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் இளம்வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

INDvsRSA toss

- Advertisement -

அதன்படி ஜூன் 9 முதல் ஜூன் 19ஆம் தேதி வரை இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. முதலாவது போட்டி ஜூன் 9ஆம் தேதி டெல்லியிலும், அடுத்தது இரண்டாவது போட்டி 12-ஆம் தேதி கட்டாக் நகரிலும், 14ஆம் தேதி மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

அதேபோன்று 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் 4-வது போட்டியும், இறுதியாக பெங்களூருவில் 19-ஆம் தேதி ஐந்தாவது போட்டியும் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இரண்டாவது டி20 போட்டியானது திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் தற்போது திடீர் சிக்கல் எழுந்துள்ளது வருத்தத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது.

Pitch

ஏனெனில் 2 ஆவது டி20 போட்டி நடைபெறும் கட்டாக் மைதானத்தில் 44 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதியுடன் உள்ளது. ஆனாலும் இவ்வளவு ரசிகர்கள் அமரும் இந்த மைதானத்தில் சரியான தீயணைப்பு வசதி இல்லை என்று ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் நாயக் என்பவர் ஆனந்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் அளித்த அந்த புகாரில் பிசிசிஐ மற்றும் ஒடிஷா கிரிக்கெட் வாரியம் ஆகிய இரண்டு நிர்வாகத்தையும் இணைத்துள்ள அவர் அவர்கள் மீது FIR பதிய வேண்டும் என்றும் வழக்கு தொடுத்துள்ளார். இதன் காரணமாக தற்போது இந்த போட்டியினை திட்டமிட்டபடி நடத்த பிசிசிஐ அவசர மீட்டிங் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : வருங்காலத்தை வளப்படுத்த சிஎஸ்கே தக்கவைக்க வேண்டிய 5 இளம் வீரர்களின் பட்டியல்

ஏற்கனவே இந்த தொடருக்கான அனைத்து போட்டிகளின் டிக்கெட் விற்பனை முடிவடைந்து உள்ளதால் இரண்டாவது போட்டியை ஒத்தி வைக்கலாமா? அல்லது வேறு மைதானத்தில் மாற்றி அமைக்கலாமா? என்பது போன்ற கருத்துக்களில் விவாதம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement