நாளைய போட்டியில் மீண்டும் களம் இறங்கப் போகும் நட்சத்திர வீரர்: ரசிகர்கள் ஜாலி -IND Vs NZ

Williamson
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 5 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அபாரமான சாதனை படைத்தது இந்திய அணி.

NZ

- Advertisement -

அதன்பிறகு நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது போட்டி நாளை நடைபெற உள்ளது

டி20 தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி அவரது நிரந்தர கேப்டன் இல்லாமலேயே இந்தியாவை வெற்றி பெற்றுள்ளது

Williamson

கேன் வில்லியம்சன் வந்துள்ளதால் அந்த அணி இன்னும் பலம் ஆகிவிடும். நாளைய போட்டி இன்னும் ஒத்துழைப்புடனும் சரி சம பலத்துடன் நடைபெறும் என்பதால் நியூசிலாந்து அணியின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். அதே சமயம் இந்திய அணி இந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று எப்படியாவது இழந்த மாண்பை மீட்க போராடும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையாக உள்ளனர். நாளைக்கு ஜாலியாக இருக்கப்போவது இந்திய ரசிகர்களா இல்லை நியூஸிலாந்து ரசிகர்களா என்பது நாளைய போட்டியின் முடிவு தீர்மானிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

Advertisement