IND vs NZ டி20 போட்டியின் பரபரப்பான 2 ஆவது சூப்பர் ஓவரில் நடந்தது என்ன ? – சுவாரசிய தகவல்

Kohli Tim Southee IND vs NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 165 ரன்கள் குவிக்க கடந்த போட்டியினை போலவே இந்த போட்டியும் சூப்பர் ஓவர் வரை சென்றது.

pandey 1

- Advertisement -

சூப்பர் ஓவரில் முதலாவதாக நியூசிலாந்து அணி வீரர்கள் முன்ரோ மற்றும் சைபர்ட் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இருவரும் இந்த போட்டியில் அரைசதம் அடித்து நல்ல டச்சில் இருந்ததால் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி சார்பாக பும்ரா வீசினார். அந்த சூப்பர் ஓவரின் முதல் பந்தில் சைபர்ட் பந்தை தூக்கி அடிக்க ஸ்ரேயாஸ் அய்யர் அந்த கேட்சை தவறவிட்டார் இதனால் முதல் பந்தில் 2 ரன்கள் கிடைத்தது.

அதற்கடுத்த பந்தில் சைபர்ட் பவுண்டரி அடிக்க 2 பந்துகளில் 6 ரன்கள் வந்தது. அதற்கு அடுத்த மூன்றாவது பந்தில் மீண்டும் தூக்கி அடிக்க இந்த முறை விக்கெட் கீப்பர் ராகுல் கேட்சை தவறவிட்டார் இதன்மூலம் 2 ரன்கள் வந்தது. அதன் பின்னர் நான்காவது பந்தில் ஒரு வழியாக வாஷிங்டன் சுந்தர் கேட்ச் பிடிக்க சைபர்ட்ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 4 பந்துகளில் நியூஸிலாந்து அணி 8 ரன்கள் குவித்தது.

munro

அதன்பிறகு 5 ஆவது பந்தில் முன்ரோ அடித்து, கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க சூப்பர் ஓவரில் 13 ரன்களை நியூசிலாந்து குவித்தது. அதன்பின்னர் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை முன்வைத்து ராகுல் மற்றும் கோலி ஆகியோர் உள்ளே வந்தனர். சென்ற போட்டியை போலவே இந்த போட்டியிலும் சவுதி சூப்பர் ஓவரை வீச வந்தார். முதல் பந்தில் ராகுல் பிரம்மாண்ட சிக்ஸ் ஒன்றை அடிக்க இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டது. அதன் பின்னர் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து அட்டகாச படுத்தினார்.

Kohli

எனவே மீதமுள்ள 4 பந்துகளில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் மூன்றாவது பந்தில் ராகுல் அவுட் ஆகி வெளியேற 3 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலைமை வந்தது. அதன் பின்னர் கோலி நான்காவது பந்தில் 2 ரன்கள் அடித்து ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடிக்க இந்திய அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement