2 ஆவது டெஸ்ட் போட்டி : ரசிகர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா ? – விவரம் இதோ

Chepauk
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரில் பின்தங்கியுள்ளது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இன்றி சென்னை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக கிரிக்கெட் சங்க அதிகாரிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 2வது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த பின்னர் தற்போது இந்த போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில் அவர்களுக்கான நடைமுறைகள் என்னென்ன பின்பற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு பிறகு முதன்முறையாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் போட்டி நடைபெற்றது. தற்போது போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது தங்களுக்கு திருப்தி தான் என சில கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றை தவிர்க்கும் பொறுத்து வீரர்கள் பயோ பபுளில் கட்டாயமான சில விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அதேபோல பார்வையாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுவார்கள். ரசிகர்கள் தவிர தன்னார்வலர்கள் பலர் இந்த மைதானத்தில் இருப்பார்கள். பவுண்டரி லைனுக்கு வெளியே விழும் பந்துகளை அவர்களே எடுத்து வீசுவார்கள் என்றும் அவ்வப்போது பந்தை அவர்கள் எடுக்கும் போதும் சனிடைசர் அப்ளை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Chepauk

மேலும் மைதானத்திற்கு வரும் 50 சதவீத பார்வையாளர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமின்றி அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வருதல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட சில நேரத்திற்கு ஒருமுறை சானிடைசர் மூலம் கைகளை தூய்மை செய்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி மைதானத்திற்குள் நுழையும் முன்னர் அவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு 17 டிகிரி இருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Chepauk 1

மேலும் பார்வையாளர்களில் யாரேனும் தும்பினாலோ அல்லது இரும்பினாலோ சம்பந்தப்பட்ட வரை அழைத்துச் சென்று தனிமைப்படுத்தப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்ற வேண்டியிருக்கும் எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement