சிட்னியில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு. 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன் மைதானம் மாற்றம் – விவரம் இதோ

indvsaus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நாளை மறுதினம் 26 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இதற்கு அடுத்ததாக ஜனவரி 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாகவும், கொரோனா அச்சம் காரணமாக சிட்னி நகர எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாது என்று பரவலாக கூறப்படுகிறது.

3ஆவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னியில் நடக்காது என்றும் அங்கிருந்து போட்டியை மைதானம் மாற்றி நடத்தப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் நடத்த தயார் நிலையில் இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் 3வது டெஸ்ட் போட்டி எங்கு நடக்கும் என்று உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

இருப்பினும் 2வது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் எந்த மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிட்னி மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை என்றாலும் நிச்சயம் மாற்றுமைதானம் தயார் செய்யப்பட்டு அந்த மைதானத்தில் போட்டி நடைபெறுவது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith

ஏற்கனவே சிட்னி நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ரோஹித் 3 ஆவது போட்டியில் இந்திய அணியுடன் இணைய சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியுடன் இணைவதில் சிக்கல் ஏதும் இல்லை என்றும் 14 நாட்கள் முடிந்து அவர் இந்திய அணியில் இணையலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement