இந்திய அணிக்காக உருவான 5 பெஸ்ட் இடதுகை ஆட்டக்காரர்கள் – முழு லிஸ்ட் இதோ

Left-Handers
- Advertisement -

இந்திய அணி தற்போது வரை பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருக்கிறது. 75 வருட கிரிக்கெட் வரலாற்றில் எண்ணற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடியுள்ளனர். அணியில் இடதுகை பேட்ஸ்மேன்களை ஆட வைப்பது எப்போதுமே ஒரு அட்வான்டேஜ்ஜை கொடுக்கும். அப்படி இந்தியா உருவாக்கிய 5 மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேன்களை தற்போது பார்ப்போம்.

Ganguly

- Advertisement -

சௌரவ் கங்குலி :

கொல்கத்தாவின் இளவரசன் இவர். இவர் பந்துவீச்சு என்னவோ வலது கை தான். ஆனால் பேட்டிங் மட்டும் இடதுகையாக இருக்கிறது. அறிமுக போட்டியிலேயே தனது அபாரமான இடதுகை ஆட்டத்தால் சதம் விளாசியுள்ளார். இவரது சராசரி 40க்கு கீழ் குறைந்தது கிடையாது. துவக்க வீரராக பட்டையை கிளப்பிய இவர் பின்னர் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தனது இடத்தை மாற்றிக் கொண்டார்.

Yuvi 2

யுவராஜ் சிங் :

- Advertisement -

இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த இடதுகை வீரர் இவர் என்று கூறலாம். பேட்ஸ்மேனாகவும் பந்துவீச்சாளராகவும் அனைத்திலும் இடதுகையை உபயோகிப்பவர். 2007 மற்றும் 2011 ஆம் உலக கோப்பை தொடரை இவரது பங்களிப்பின் மூலம் இந்திய அணி வென்றது என்று கூறலாம். தற்போது ஒரு வருடத்திற்கு முன்னர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gambhir 1

கௌதம் காம்பீர் :

- Advertisement -

டெல்லியை சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போதைய விராட் கோலியையை போல் ஆடி வந்தார் கம்பிர். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார். 2007ம் ஆண்டு நடைபெற்ற அறிமுக டி20 உலகக் கோப்பை போட்டியில் 75 ரன்கள் இறுதிபோட்டியில் மட்டும் விளாசி இருந்தார். அதேபோல் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 97 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

Suresh Raina

சுரேஷ் ரெய்னா :

- Advertisement -

தோனியின் தளபதிகளில் முன்னணியில் நிற்கும் வீரர். இவர் காலகட்டத்தில் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் அதிகபட்சமாக இருந்தது. வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் தோனியின் அறிவுரைப்படி பந்துவீச்சாளராக மாறியது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டியில் ஐந்தாம் இடத்தில் எப்போதும் களமிறங்கும் இவர் 5000+ ரன்களும் 36 அரை சதங்களும் விளாசியுள்ளார்.

dhawan 2

ஷிகர் தவான் :

கங்குலிக்கு பிறகு மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேன் ஆக இந்திய அணிக்கு கிடைத்தவர். துவக்க வீரராக விரேந்தர் சேவாக் போல அதிரடியாக அடித்து ஆடுவதில் வல்லவர். தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 5000 ரன்கள் விளாசி விட்டார். இதன் சராசரி 45 ஆகும். தனது முதல் போட்டியிலேயே டெஸ்ட் போட்டி என்றும் கூட பார்க்காமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 180 ரன்கள் அடித்து விளாசினாளர். இந்த பட்டியலில் இடம் பெறுவதற்கு இவர் மிகவும் தகுதியான ஒருவர் தான்.

Advertisement