IND vs NZ : நியூசிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

IND-vs-NZ-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்ததை அடுத்து தொடர்ச்சியாக டி20 அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த ஆண்டிற்கான உலககோப்பை தொடருக்காக முழுமையான இளம் வீரர்களைக் கொண்ட அணியை தற்போது கட்டமைத்து வருகிறது. மேலும் இனி சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் டி20 அணியில் இடம்பெறமாட்டார்கள் என்று ஒரு பேச்சு இருந்து வருகிறது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்டியா கேப்டனாகவும், சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்களின் கீழ் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட டி20 அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடருக்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது. இந்த டி20 தொடரானது வரும் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியிலும் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியாகவே அறிவித்துள்ளது. அதன்படி பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அந்த 16 வீரர்கள் கொண்ட பட்டியலில் ஹார்டிக் பாண்டியா கேப்டனாகவும், சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அவர்களுடன் சேர்த்து இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அனைத்து வீரர்கள் கொண்ட முழுப்பட்டியல் இதோ :

இதையும் படிங்க : IND vs NZ : நியூசிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

1) ஹார்டிக் பாண்டியா, 2) சூரியகுமார் யாதவ், 3) இஷான் கிஷன், 4) ருதுராஜ் கெய்க்வாட், 5) சுப்மன் கில், 6) தீபக் ஹூடா, 7) ராகுல் திரிபாதி, 8) ஜித்தேஷ் சர்மா, 9) வாஷிங்க்டன் சுந்தர், 10) குல்தீப் யாதவ், 11) யுஸ்வேந்திர சாஹல், 12) அர்ஷ்தீப் சிங், 13) உம்ரான் மாலிக், 14) ஷிவம் மாவி, 15) ப்ரித்வி ஷா, 16) முகேஷ் குமார்.

Advertisement