இந்திய வீரர்களுக்கு இன்று யோயோ பயிற்சி துவங்கியது..

yoyotraining
- Advertisement -

இந்திய அணி வரும் மாதங்களில் தொடர்ந்து பல தொடர்களில் விளையாடவுள்ளது. வரும் ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதற்கு முன்பாக ஐயர்லாந்திற்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாட்டுள்ளது.

training

இந்த தொடர்களுக்கான இந்திய வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக 40 மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு இன்று (ஜூன் 5) ஆம் தேதி தொடங்கி முதல் 10 தேதி வரை இந்த யோ யோ டெஸ்ட் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெரும் வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறுவார்கள்.

- Advertisement -

 

யோ யோ டெஸ்ட் என்றால் என்ன ?இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது . இது மிகவும் கடினம், 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ,கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். ஒவ்வொரு பீப் சத்தம் கேட்கும் போது வேகத்தை அதிகரிக்க வேண்டும். இதில் வெற்றி பெற்று பிட்னஸை நிரூபிப்பது மிகவும் கடினம்.

trainingtest

இதில் வென்றால்தான் அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த டெஸ்டில் இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்த தகுதி சோதனையில் வெற்றி பெற முடியாமால் இருந்ததால் அணியில் இடம் கிடைக்காமல் போனது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் யுவராஜ் சிங் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement