தர்மசாலா சென்றடைந்த இந்திய அணி. தடபுடலாக வரவேற்ற நிர்வாகம் – புகைப்படங்கள் இதோ

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தர்மசாலா நகரில் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது மைதானத்தை சென்றடைந்தது. ஹோட்டலில் இந்திய வீரர்களுக்கு தடபுடலான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய அணி வீரர்கள் கழுத்தில் மாலையுடன் தலையில் தொப்பியுடன் விமர்சையாக வரவேற்கப்பட்டு ஹோட்டல் அறைக்கு சென்றனர். இந்திய அணி வீரர்களின் இந்த புகைப்படங்களை தற்போது பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.