இலங்கை அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தின் இந்திய அணி இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

Bumrah

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி மற்றும் அதனைத் தொடரந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட, வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு செல்ல இருக்கின்றனர். இத் தொடர்கள் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் தான் முடிவடையும் என்பதால், இடையில் இருக்கும் ஜூலை மாதத்தில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த தொடருக்கு இங்கிலாந்துக்கு செல்லவிருக்கும் இந்திய வீரர்களை தவிர்த்து, மற்ற இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தயார் செய்யப்படும் என அறிவித்திருந்தார் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி.

sl

அதன்படி இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடர், விஜய் ஹசாரே ட்ராபி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் அடிப்படையில், இந்திய உத்தேச அணியை நாங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியிலில் முதலிடத்தில் இருக்கும் ஷிகர் தவானும், டெல்லி அணியின் மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷாவும் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது. மேலும் பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல்லும் இந்திய அணியில் இடம் பிடிப்பார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் தோல்பட்டை காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து வெறியேறிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது உடல் தகுதியை நிரூபித்து இந்திய அணியுடன் இணைவார் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி தங்களது திறமையை நிரூபித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்டியா, ராகுல் சஹார் ஆகியோரும் நிச்சயமாக இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வரிசையில் இஷான் கிஷானுக்கு அடுத்த படியாக சஞ்சு சாம்சன் தேர்வாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரரான தமிழ்நாட்டின் ஜெகதீஷன் மற்றும் அதே தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த கேதார் தேவ்தார் ஆகியோரின் பெயர்களும் பரீசலிக்கப்பட்டு வருகிறது. ஆல்ரவுண்டர்கள் இடத்தை ஹர்திக் பாண்டியா, ராகுல் திவேட்டியா ஆகிய இருவரும் நிரப்பி விடுவார்கள். கால் முட்டி காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தமிழக வீரரான நடராஜனின் உடல் நிலை தேறிவிட்டால் இடது கை வேகப் பந்து வீச்சாளராக அவரும் அணியுடன் இணைவார். ஒருவேளை அவர் சரியாகாவிட்டால் அந்த இடத்தை, இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் வீரரான சேத்தன் சக்காரியாவை வைத்து இந்திய தேர்வுக் குழு நிரப்பும் என தெரிகிறது.

- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புவனேஷ் குமார், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகாமல் போனதால் இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் நிச்சயம் இருப்பார். அவருடன் தீபக் சஹார், நவ்தீப் சய்னி, ஹர்ஷல் பட்டேல் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டயலில் இடம் பிடிப்பார்கள். மேலும் யுஸ்வேந்திர சஹால் மற்றும் கொரானாவில் இருந்து மீண்டு வந்துள்ள தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் இந்திய அணியில் ஸ்பின் பௌலர்களாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இந்திய அணி:

01. ஷிகர் தவான் (கேப்டன்) 02. ப்ரித்வி ஷா 03. தேவ்தத் படிக்கல் 04. ஸ்ரேயாஸ் அய்யர் (உடற்தகுதி அடிப்படையில்) 05. சூர்யகுமார் யாதவ் 06. இஷான் கிஷான் 07. சஞ்சு சாம்சன் 08. ஜெகதீஷன் 09. கேதார் தேவ்தார் 10. ஹர்திக் பாண்டியா 11.ராகுல் திவேட்டியா 12. புவனேஷ் குமார் 13. நவ்தீப் சய்னி 14. தீபக் சஹார் 15. ஹர்ப்ரீத் பிரார் 16. சேத்தன் சக்காரியா 17. ஹர்ஷல் பட்டேல் 18. ராகுல் சஹார் 19. சஹால் 20. வருண் சக்கரவர்த்தி

Advertisement