நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

IND-vs-RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரானது நாளை டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 12-ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 14-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

அதன்படி நாளை நடைபெற இருக்கும் இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரும், ஐந்தாவது இடத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள்.

அதே போன்று ஆறாவது இடத்தில் பினிஷரான ரிங்கு சிங்கும், அவரை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோரும் விளையாட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் விளையாடுவார்கள். அதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அதுக்கான நேரம் வந்தாச்சு.. ரோஹித், விராட் கோலியிடம் தெளிவா சொல்லிடுங்க.. பிசிசிஐக்கு ஹர்பஜன் கோரிக்கை

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) சுப்மன் கில், 3) இஷான் கிஷன், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) சூரியகுமார் யாதவ், 6) ரிங்கு சிங், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகமது சிராஜ், 11) முகேஷ் குமார்.

Advertisement