இரண்டாவது ஒருநாள் போட்டி : இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச அணி இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இன்று 2வது ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என்ற முனைப்பில் விளையாட இருக்கிறது.

IND

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியை ஒரு முறையாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பது குறித்த தகவலை இங்கே காணலாம்.

கடந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எந்த விதத்திலும் சற்றும் குறைவில்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. இதன் காரணமாக நிச்சயம் இந்த போட்டியில் எந்த வீரரின் இடத்திலும் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

chahal

ஒருவேளை இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில் அடுத்த போட்டிக்கான பிளே லெவனில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ :

1) ஷிகார் தவான், 2) ப்ரித்வி ஷா, 3) இஷான் கிஷன், 4) மனிஷ் பாண்டே, 5) சூரியகுமார் யாதவ், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) தீபக் சாகர், 9) புவனேஷ்வர் குமார், 10) சாஹல், 11) குல்தீப் யாதவ்

Advertisement