IND vs PAK : டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு. பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் – லிஸ்ட் இதோ

Rohith
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நேற்று 15-வது ஆசிய கோப்பை தொடரானது கோலாகமாக துவங்கியது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி அபார பெற்ற வேளையில் இன்று ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்கியுள்ளது.

இந்த ஆசியகோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியானது தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதே மைதானத்தில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையின் போது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்திருந்தது.

- Advertisement -

அதனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்முறை இந்திய அணி இந்த போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் சற்று முன்னர் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாசில் வெற்றி பெற்று முதலில் இந்திய அணி பந்து வீசும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் இந்த டாசுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்கள் குறித்தும் அவர் அறிவித்தார். அதன்படி இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார் என்றும் அதனால் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடவில்லை என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஆவேச கான் விளையாடுவார் என்றும் அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது முதலில் பந்துவீச தயாராகி வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ரெய்னா மாதிரி செயல்படும் அவருக்கு டீமில் சான்ஸ் கொடுக்கலாமே – இளம் வீரரை பாராட்டும் முன்னாள் வீரர்

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) தினேஷ் கார்த்திக், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) புவனேஷ்வர் குமார், 9) ஆவேஷ் கான், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement