- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதால் இந்த போட்டியில் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் நாளைய போட்டியிலும் இந்திய அணியின் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெயஷ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் விளையாடுவது உறுதி. அதனை தொடர்ந்து டாப் ஆர்டரில் மூன்றாவது வீரராக சுப்மன் கில்லும் நான்காவது இடத்தில நட்சத்திர வீரரான விராட் கோலியும் விளையாடுவார்கள்.

ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட், ஆறாவது இடத்தில் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. மேலும் ஏழு, எட்டு ஆகிய இடங்களில் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் விளையாடுவதும் உறுதி எஞ்சியுள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

மற்றபடி இந்த போட்டியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் தேவைப்பட்டால் நிதீஷ் குமார் நீக்கப்பட்டு அவரது இடத்தில் அறிமுக வீரராக தனுஷ் கோட்டியானுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாளைய இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : “பாக்சிங் டே” போட்டியை எந்த சேனலில் பாக்கலாம்.. இந்திய நேரப்படி போட்டி எப்போது நடைபெறும் – விவரம் இதோ

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ரிஷப் பண்ட், 6) ரோஹித் சர்மா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) நிதீஷ் குமார் ரெட்டி / தனுஷ் கோட்டியான், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) ஆகாஷ் தீப்.

- Advertisement -