IND vs BAN : நாளையை முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை வங்கதேச அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்பானது நாளை டிசம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்குகிறது. அதன்படி நாளை சட்டகிராம் நகரில் முதலாவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது.

IND vs BAN

- Advertisement -

இந்த முதல் போட்டிக்கான டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, முகமது ஷமி மற்றும் ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெறவில்லை. அதன் காரணமாக கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியானது இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்துள்ளது. அந்த வகையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்க போகும் 11 பேர் கொண்ட உத்தேச பட்டியலை தான் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Rahul

அதன்படி நாளைய முதல் போட்டியில் துவக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் புஜாராவும், நான்காவது இடத்தில் விராட் கோலியும், ஐந்தாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களம் இறங்குவார்கள்.

- Advertisement -

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் ஆறாவது இடத்திலும், சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் இடம் பிடிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. அதன்படி நாளைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இனிமே அந்த 3 பேருக்கும் இந்திய அணியில் எப்போதுமே வாய்ப்பு கிடையாது – பி.சி.சி.ஐ அதிரடி நீக்கம்

1) கே.எல் ராகுல், 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) ரிஷப் பண்ட், 7) அக்சர் படேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) ஷர்துல் தாகூர், 10) உமேஷ் யாதவ், 11) முகமது சிராஜ்.

Advertisement