2வது போட்டியில் விளையாடாத துணை கேப்டன் சுப்மன் கில்.. விளக்கிய சூர்யகுமார்.. இந்திய பிளேயிங் லெவன்

Suryakumar Yadav 3
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 27ஆம் தேதி துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

மறுபுறம் அசலங்கா தலைமையில் தோற்ற இலங்கை ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டி ஜூலை 28ஆம் தேதி பல்லகேல் நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கியது. மழையால் கொஞ்சம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

இந்திய அணி:
இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் விளையாடவில்லை என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் அறிவித்தார். குறிப்பாக நேற்று விளையாடிய அவர் இன்று காலை எழுந்திருக்கும் போது கழுத்து பிடிப்பு வலியை சந்தித்ததாக சூரியகுமார் தெரிவித்தார். எனவே அவருக்கு பதிலாக இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும் சூரியகுமார் தெரிவித்தார்.

அத்துடன் 2வது இன்னிங்ஸில் பிட்ச் முன்னேறுவதாலும் மழை பெய்வதற்கான சூழ்நிலை இருப்பதாலும் இந்தியா சேசிங் செய்ய தீர்மானித்துள்ளதாக சூரியகுமார் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பந்து வீசிகிறோம். இங்கே கொஞ்சம் மழை பெய்வதற்கான சூழ்நிலையும் இருக்கிறது. பிட்ச் 2வது இன்னிங்ஸில் நன்றாக விளையாடுகிறது”

- Advertisement -

“எனவே முதல் போட்டியில் வென்றாலும் நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். இன்று சுப்மன் கில் எழுந்திருக்கும் போது கழுத்து பிடிப்பை சந்தித்தார். எனவே அவருக்கு பதிலாக சாம்சன் அணிக்குள் வந்துள்ளார்” என்று கூறினார். மற்ற படி முதல் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் இந்த போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றனர்.

இதையும் படிங்க: தொடர்நாயகன் விருது வென்றும் வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. என்ன இதெல்லாம் – ரசிகர்கள் வருத்தம்

இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலேயே வென்று இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. இலங்கை 2வது போட்டிக்கான இந்திய அணி: யசஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் (கீப்பர்), சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமத் சிராஜ்

Advertisement