கறுப்பட்டை அணிந்தது மட்டுமின்றி மவுன அஞ்சலியும் செலுத்திய இந்திய வீரர்கள் – காரணம் இதுதான்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்த தொடரானது இன்று காலை இந்திய நேரப்படி 9.10 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் வெற்றியுடன் துவங்க இந்திய அணியும், இந்திய அணியை பழிதீர்க்க ஆஸ்திரேலிய அணியும் பல பரிட்சை நடத்தி வருகின்றன.

INDvsAUS Toss

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி துவங்கிய போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்தது அதுமட்டுமின்றி சில நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தினர். அதன்பின் இருக்கும் விடயம் என்னவென்று பிசிசிஐ வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி ஐபிஎல் தொடருக்காக வர்ணனை செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் மாரடைப்பு காரணமாக மும்பையில் மரணம் அடைந்தார். அவரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு இதே தேதியில் நவம்பர் 27ஆம் நாள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தலையில் பந்து தாக்கி உயிரிழந்த ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான பில் ஹுக்ஸ் நினைவஞ்சலி செலுத்தும் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

அதுமட்டுமின்றி மௌன அஞ்சலியும் செலுத்தினர். இதனை பிசிசிஐ தங்களது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர்களும் அவர்களது அஞ்சலியையும், வருத்தத்தையும் தெரிவித்தனர். தற்போது இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் போட்டியில் இரு அணி வீரர்களும் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement