
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது சற்று முன்னர் தரம்சாலா நகரில் துவங்கியது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று தரம்சாலா நகரில் நடைபெற்று வரும் வேளையில் இந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெறும் என்பதால் இரு அணிகளுக்குமே இது முக்கியமாக போட்டியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் போடப்பட்ட டாசுக்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.
மேலும் இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய அவர் இரண்டு மாற்றங்கள் இன்று செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்தார். அந்த வகையில் கடந்த போட்டியின் போது இந்திய அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதோடு அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரானா ஹர்ஷித் ராணாவும், சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் அணிக்குள் வந்துள்ளனர் என அறிவித்தார். மற்றபடி கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே மீண்டும் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இந்தமுறை அந்த வாய்ப்பு கிடைக்கும் அதை மிஸ் பண்ணாதீங்க.. ப்ரித்வி ஷாவுக்கு – இர்பான் பதான் அட்வைஸ்
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ஜிதேஷ் சர்மா, 8) ஹர்ஷித் ராணா, 9) அர்ஷ்தீப் சிங், 10) குல்தீப் யாதவ், 11) வருண் சக்கரவர்த்தி.