தோனி தலைமையில் கூட இது நடந்ததில்லையாம். சாதித்து காட்டிய கோலி – விவரம் இதோ

Dhoni

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே நடந்த முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Ishanth-2

இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட்களில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதன்மூலம் தொடர்ந்து தொடர்ந்து 4 இன்னிங்ஸ் வெற்றி மட்டுமின்றி தொடர்ந்து 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையும் கோலி படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு காலங்களில் இருந்த பெரிய பெரிய அணிகளின் கேப்டன்கள் கூட செய்யாத ஒரு அசாத்திய சாதனையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் தோனி 6 டெஸ்டை வென்றிருந்தது சாதனையாக இருந்தது அதனை தற்போது கோலி முறியடித்துள்ளார்.

Cup

மேலும் கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற வீரர்கள் வரிசையில் ஆலன் பார்டர் (32 வெற்றி) பின்னுக்குத்தள்ளி தற்போது கோலி 33 டெஸ்ட் வெற்றிகளுடன் 5 ஆவது வீரராக டாப் 5 கேப்டன்களின் வரிசையில் இணைந்து குறிப்பிடத்தக்கது.

- Advertisement -