
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்தமாத துவக்கத்தில் தொடங்க உள்ளதால் அந்த தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டது இந்த தொடரில் தோனி இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக பண்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் மீண்டும் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 தொடருக்கான இந்திய அணி : கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, தவான், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், க்ருனால் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் சாகர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாகர், நவதீப் சைனி