4வது இங்கிலாந்து டி20யில் நீக்கப்பட்ட ஷமி, துபே இஸ் பேக்.. 3 மாற்றங்களுடன் இந்திய அணி இதோ

IND vs ENG 2
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த இங்கிலாந்து தொடரை வெல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலையில் இத்தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 31ஆம் தேதி புனேவில் இரவு 7 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் 4 ஸ்பின்னர்கள் விளையாடியது பெரிய பின்னடைவை கொடுத்தது. அதன் காரணமாக இந்தப் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதாக கேப்டன் சூரியகுமார் யாதவ் அறிவித்தார்.

- Advertisement -

சிவம் துபே பேக்:

குறிப்பாக கடந்தப் போட்டியில் பேட்டிங் சுமாராக இருந்ததால் இந்தியா தோல்வியை சந்தித்தது. எனவே அதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சூரியகுமார் தெரிவித்தார். அதே போல ஷமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதாக அவர் அறிவித்தார். அதற்கான காரணத்தை பற்றி சொல்லவில்லை.

ஏனெனில் கடந்தப் போட்டியில் தான் ஒரு வருடம் கழித்து விளையாடிய முகமது ஷமி அதற்கடுத்த போட்டியிலேயே விளையாடவில்லை. அதனால் அவருக்கு காயமா அல்லது அணியின் நன்மைக்காக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அதே சமயம் காயத்தை சந்தித்த ரிங்கு சிங் இன்று துருவ் ஜுரேலுக்கு பதிலாக விளையாட உள்ளதாகவும் சூரியகுமார் கூறினார்.

- Advertisement -

இந்திய அணி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இவை அனைத்தும் இங்கே வந்து கிரிக்கெட்டின் நல்ல பிராண்டை விளையாடுவதைப் பற்றியதாகும். அடிப்படைகளில் நாங்கள் இருக்க வேண்டும். கடந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்த விஷயங்களை நாங்கள் ராஜ்கோட்டிலேயே விட்டுவிட்டு வந்துள்ளோம். இங்கே நாங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் விளையாட்டை விளையாடுவோம் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: நட்பே வீக்னெஸ்.. இந்தியாவுடன் இதை செய்யாம இருந்தாவே ஜெயிக்கலாம்.. பாகிஸ்தானுக்கு மொய்ன் கான் அறிவுரை

“பிட்ச் கொஞ்சம் காய்ந்தது போல் இருக்கிறது. இதில் நாங்கள் ரன்கள் அடித்து பின்னர் கட்டுப்படுத்த விரும்புகிறோம். ஷமிக்கு பதில் அர்ஷ்தீப், ஜுரேலுக்கு பதிலாக ரிங்கு விளையாடுகிறார். எங்களுக்கு கொஞ்சம் பயர் பவர் தேவைப்படுவதால் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் சிவம் துபே விளையாட உள்ளார்” என்று கூறினார். மற்ற படி கடந்தப் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் இந்தப் போட்டியிலும் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள்.

Advertisement