முதல் டி20யில் டாஸ் வென்ற சூரியகுமார்.. ஷமி இல்லை.. தமிழக வீரருக்கு இடம்.. இந்திய பிளேயிங் லெவன் இதோ

Suryakumar Yadav 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதிரடியான வீரர்கள் நிறைந்த உலகின் டாப் இரண்டு அணிகள் மோதும் இந்த தொடருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் இரவு 7 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இரவு நேரத்தில் பனி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆரம்பத்திலேயே பவுலிங் செய்ய விரும்புவதாக சூரியகுமார் கூறினார். மேலும் தரமான வீரர்கள் இருப்பதால் அனைவரையும் தேர்ந்தெடுப்பது கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

இந்தியா பவுலிங்:

இந்திய அணியில் சமீபத்தில் அடுத்தடுத்த சதங்களை அடித்த சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றனர். அபிஷேக் சர்மா துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி, துணை கேப்டன் அக்சர் பட்டேல் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக தேர்வாகியுள்ளார்கள்.

ரவி பிஸ்னோய் மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஸ்பின்னர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அர்ஷ்தீப் சிங் மட்டுமே முழு நேர வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்தும் இப்போட்டியில் களமிறங்கவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இது பற்றி சூரியகுமார் யாதவ் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பவுலிங் செய்ய பார்க்கிறோம். பிட்ச் திடமாக இருப்பது போல் தெரிகிறது. நேரம் செல்ல செல்ல பனி வரும்”

- Advertisement -

இந்திய அணி:

“இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களுடைய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கு நாங்கள் நன்றாக தயாராகி வந்துள்ளோம். எனவே இந்த தொடருக்காக முன்னோக்கி இருக்கிறோம். இரு அணிகளிடமும் இந்தத் தொடரில் நல்ல போட்டி இருக்கும். நல்ல வீரர்கள் இருப்பது நல்ல தலைவலி. நாங்கள் எங்களுடைய பலத்துக்கு ஆதரவு கொடுக்க விரும்புகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2 வருஷம் 121 விக்கெட்ஸ்.. சஹால் கேரியரை இப்படி முடிச்சு விட்டிங்களே.. ஆகாஷ் சோப்ரா ஏமாற்றம்

முதல் இங்கிலாந்து டி20 போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஹரிதிக் பாண்டியா, ரிங்கு சிங், நிதீஷ் குமார் ரெட்டி, அக்ஸர் பட்டேல், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி

Advertisement