மறுபடியும் தப்பு பண்ண மாட்டேன்.. 2வது போட்டியில் சாய் சுதர்சனை சேர்த்த கில்..  கம்பேக் வீரருக்கு சேர்ந்த பரிதாபம்

Shubman Gill 2
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 6ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. குறிப்பாக 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்ற பெரும்பாலான இந்திய சீனியர் வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

அதனால் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா சுமாராக விளையாடி ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 7ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

சுதர்சனுக்கு இடம்:
குறிப்பாக ஹராரே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வரலாற்றில் அதிகமாக வெற்றி கண்டுள்ளன. ஆனால் அது தெரியாமல் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்த முடிவு இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. எனவே இப்போட்டியில் அந்த தவறை செய்யாத கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அத்துடன் இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். அதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது நீக்கப்பட்டார். சொல்லப்போனால் கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடிய கலீல் அகமது 5 வருடங்கள் கழித்து நேற்றைய போட்டியில் களமிறங்கினார்.

- Advertisement -

அதனால் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு மற்றொரு போட்டிக்கும் இடையே அதிக போட்டிகளைத் தவற விட்ட வீரராகவும் அவர் உலக சாதனை படைத்தார். ஆனால் கம்பேக் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் இப்போட்டியில் வாய்ப்பை இழந்த அவர் பரிதாபமாக பெஞ்சில் அமர்ந்தார். மற்றபடி முதல் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் இந்தப் போட்டியிலும் விளையாடுவதாக கேப்டன் கில் அறிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: கபில் தேவ், தோனி போல சுயநலமற்ற ரோஹித் சர்மாவும் அவங்களோட கேப்டனாகிட்டாரு.. கவாஸ்கர் பாராட்டு

“முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். நேற்று விளையாடிய அதே பிட்ச் இன்று உள்ளது. எனவே அதில் பேட்டிங் செய்வதற்கு நல்ல வாய்ப்பு. சூரியன் நன்றாக தெரியும் இன்றைய நாளில் அது காய்ந்திருக்கிறது. எங்களுடைய பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. கலீல் அகமதுக்கு பதிலாக சாய் சுதர்சன் எங்களுடைய அணியில் விளையாடுகிறார்” என்று கூறினார்.

Advertisement