கேப்டன் கோலி மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் அபராதம் விதித்த ஐ.சி.சி – காரணம் இதுதான்

ind-1
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இந்திய வீரர்கள் என அனைவருக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது ஏனெனில் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதலில் பந்து வீசிய இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை வீசிய முடிக்க முடியாமல் தாமதப்படுத்தி இதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ind

மேலும் காலதாமதமாக ஓவர்களை வீசியதன் காரணமாக விதிக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறை காரணமாக தற்போது கேப்டன் கோலி மட்டுமின்றி இந்த ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீரர்களின் அனைவரது ஊதியத்திலிருந்தும் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement