
சமீபத்தில் நடந்த முடிந்துள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை. 3-1 என்கிற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.இந்த தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப்ற்கான இறுதிப்போட்டியில் இந்தியா பங்கெடுத்துக் கொள்ள முடியும் இக்கட்டான நிலையில் தொடரை ஆரம்பித்த இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து அதிர்ச்சியை தந்தது. பின்னர் நடந்த மூன்று போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-1 என்கிற கணக்கில் அபாரமாக தொடரை கைப்பற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இது மட்டும் இல்லாது கூடுதல் சிறப்பாக ஒரு புதிய சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி அதன் மண்ணில் இரண்டு முறை (1994 – 2001)&( 2004 – 2009) தொடர்ச்சியாக பத்து டெஸ்ட் தொடரை இதுவரை வென்று உள்ளது அதுவே மிகப்பெரிய சாதனையாக இருந்தது. ஆனால் இந்தியா தற்போது தனது சொந்த மண்ணில் 13 முறை தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
(2012 – 2013) ஆண்டு ஆஸ்திரேலிய அணியை 4-0 என்கிற கணக்கிலும் , (2013 – 2014) ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்கிற கணக்கிலும், (2015 – 2016) ஆண்டு தென்னாப்பிரிக்க அணியை 3-0 என்கிற கணக்கிலும், ( 2016 – 2017 )ஆண்டு நியூசிலாந்து அணியை 3-0 என்கிற கணக்கிலும், (2016 – 2017) ஆண்டு இங்கிலாந்து அணியை 4-0 என்கிற கணக்கிலும், (2016 – 2017 )ஆண்டு வங்காளதேசத்தை 1-0 என்கிற கணக்கிலும் , ( 2016 – 2017 ) ஆண்டு ஆஸ்திரேலிய அணியை 2-1 என்கிற கணக்கிலும் ,
( 2017 – 2018 )ஆண்டு இலங்கை அணியை 1-0 என்கிற கணக்கிலும் , 2018ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியை 1-0 என்கிற கணக்கிலும், (2018 – 2019) ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்கிற கணக்கிலும், (2019 – 2020 ) ஆண்டு தென்னாப்பிரிக்க அணியை 3-0 என்கிற கணக்கிலும், (2019 – 2020)ஆண்டு வங்காள தேசத்தை 2-0 என்கிற கணக்கிலும் , கடைசியாக தற்போது (2020 – 2021 ) ஆண்டு இங்கிலாந்தை 3-1 என்கிற கணக்கிலும் இந்தியா இதுவரை ஜெயித்து உள்ளது.
2012ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரை இப்படி மொத்தமாக 13 ஆண்டுகள் எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இந்திய மண்ணில் இழந்ததில்லை. மேலும் இங்கு நடந்த அனைத்து தொடர்களையும் இந்திய அணி சொந்த மண்ணில் வென்று புதிய சாதனையை படைத்துள்ளது.ஹோம் கிரவுண்டுகளில் டெஸ்ட் கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டியை வென்ற கேப்டன்கள் மத்தியில் தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் 30 போட்டிகளை வென்றதோடு முதலிடத்திலும் , ரிக்கி பாண்டிங் 29 போட்டிகளுடன் இரண்டாவது இடத்திலும் , ஸ்டீவ் வாக் 22 போட்டிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
தற்போது விராட் கோலி 23 போட்டிகளை வென்றதோடு ஸ்டீவ் வாக்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இன்னும் சில வருடங்களில் அவருக்கு பாண்டிங்கையும் கிரீம்ஸ் ஸ்மித்தையும் பின்னுக்குத் தள்ளி விடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.