IND vs BAN : ப்ளூ ஜெர்சிக்கு திரும்பிய இந்திய வீரர்கள். ரசிகர்கள் ஆரவாரம்

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச

Shami
- Advertisement -

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதுகின்றன.

Ind-vs-Ban

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி துவங்குவதற்கு முன் இந்திய அணியின் மாற்றங்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

அதன்படி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவிற்கு பதிலாக புவனேஷ்வர் குமாரும், கேதார் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த போட்டியில் இந்திய அணியினர் மீண்டும் தங்களது நிறமான ப்ளூ சீருடையில் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

india

கடந்த போட்டியில் ஆரஞ்சு நிறம் கொண்ட சீருடை அணிந்தாலே தோற்றார்கள் என்று ரசிகர்கள் சிலர் விமர்சிக்க மீண்டும் ப்ளூ ஜெர்சிக்கு மாறியுள்ள இந்திய அணியை ரசிகர்கள் வரவேற்ற வண்ணம் உள்ளனர். எது எப்படி இருந்தாலும் இந்தியா இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு செல்வதே முக்கியம்.

Advertisement