இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாகவும் துவங்கியது.
அந்த நிலையில் இந்த தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி ஜூலை 30ஆம் தேதி இலங்கையின் பல்லகேல் நகரில் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு துவங்கியது. இருப்பினும் மழையால் தாமதமாக இரவு 7.40 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மறுபுறம் நாங்களும் சேசிங் செய்வதே விரும்புவதாக இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார்.
இந்திய அணி:
அத்துடன் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் இப்போட்டியில் 4 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாகவும் சூரியகுமார் அறிவித்தார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்ட் ஆகிய 4 வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக சூரியகுமார் தெரிவித்தார். அவர்களுக்கு பதிலாக சிவம் துபே மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் இரண்டாவது போட்டியில் காயத்தால் விலகிய துணை கேப்டன் சுப்மன் கில் தற்போது குணமடைந்துள்ளதால் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். அவர்களுடன் கலில் அகமது இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். இது பற்றி டாஸ் வீசிய பின் சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “மழை பெய்வதற்கான சூழ்நிலை தெரிவதால் நாங்களும் சேசிங் செய்வதையே விரும்பினோம்”
“ஏனெனில் இரண்டாவது பகுதியில் பந்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. இப்போட்டியில் நாங்கள் 4 வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம். ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரிசப் பண்ட், அர்ஷ்தீப் சிங். நாங்கள் கிரிக்கெட்டின் எந்த பிராண்டை விளையாட விரும்புகிறோம் என்பதை பற்றி பேசினோம். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் எப்படி மேலே வந்து எங்களுடைய சிறந்த வெர்சனை வெளிப்படுத்துகிறோம் என்பது முக்கியம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இன்னும் 116 ரன்ஸ் போதும்.. உலகளவில் நான்காவது வீரராக மாபெரும் மைல்கல்லை தொட காத்திருக்கும் – விராட் கோலி
3வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்: சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், கலீல் அகமது



