இன்னும் 116 ரன்ஸ் போதும்.. உலகளவில் நான்காவது வீரராக மாபெரும் மைல்கல்லை தொட காத்திருக்கும் – விராட் கோலி

Kohli
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை தொடர்ந்து 35 வயதான விராட் கோலி சர்வதேச டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் அடுத்த சில ஆண்டுகள் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகியிருந்தார்.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 125 டி20 போட்டிகள், 292 ஒருநாள் போட்டிகள் மற்றும் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஏகப்பட்ட சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த வீரராக கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வந்த விராட் கோலி 35 வயது எட்டியுள்ள போதும் இன்னும் முழு உடற்தகுதியுடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மேலும் 116 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் விராட் கோலி மற்றும் ஒரு சாதனை மைல்கல்லை எட்ட காத்திருக்கிறார். அந்த வகையில் எதிர்வரும் இலங்கை தொடரில் அவர் 116 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் 27 ஆயிரம் ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த நான்காவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார்.

- Advertisement -

இவருக்கு முன்னதாக இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், சங்ககாரா, ரிக்கி பாண்டிங் ஆகிய மூவர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 27000 ரன்களை கடந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 34357 ரன்களுடன் முதலிடத்திலும், சங்ககாரா 28016 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்து ரிக்கி பாண்டிங் 27483 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : ஜெய் ஷா சிக்கிட்டாரு.. இந்தியாவுக்கு வழியில்ல.. பாகிஸ்தான் ஒரே கல்லில் 3 மாங்காய் அடிக்கும்.. எச்சரித்த பசித் அலி

தற்போது இவர்களுக்கு அடுத்து நான்காவது இடத்தில் இருக்கும் விராட் கோலி 26884 ரன்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். மேலும் இவர் 116 ரன்களை குவிக்கும் பட்சத்தில் 27000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement